செய்திகள்
கோப்பு படம்

ஜோர்டான்: தகர வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பாகிஸ்தானியர்கள் பலி

Published On 2019-12-02 11:45 GMT   |   Update On 2019-12-02 12:25 GMT
ஜோர்டான் நாட்டில் தகர வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பாகிஸ்தானை சேர்ந்த பண்ணை தொழிலாளிகள் குடும்பத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அம்மான்:

ஜோர்டான் நாட்டில் விவசாயம் சார்ந்த தொழில்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வேலை செய்துவருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில், ஷுனே பகுதியில் உள்ள ஒரு  பண்ணையில் வேலை செய்துவந்த 2 பாகிஸ்தானியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தகர வீடுகளில் வசித்து வந்தனர்.  



அந்த தொழிலாளிகள் வசித்துவந்த தகர வீட்டில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விராசரனை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News