செய்திகள்
டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளம்பெண்

சீனா அரசு குறித்து விமர்சனம் - அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கு நீக்கம்

Published On 2019-11-28 19:59 GMT   |   Update On 2019-11-28 19:59 GMT
சீனா அரசு குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் பெரோசா அசிஸ் (வயது 17). இவர் தனது ‘டிக்டாக்’கில் அழகு குறிப்புகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அப்படி ஒரு வீடியோ அழகு குறிப்புகளோடு சீனா குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் ‘‘சீனாவில் சிறுபான்மையினர்களாக உள்ள உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடனடியாக உங்கள் தொலைபேசியில் இதுகுறித்துத் தேடுங்கள்’’ என்று பேசியிருந்தார்.

இதன் காரணமாக அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. சுமார் 15 லட்சம் பேர் அந்த வீடியோ பார்த்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது. இதற்கிடையே பெரோசா அசிசின் கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிக்டாக் நிறுவனத்துக்கு எதிரான கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் பெரோசா அசிசின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கு ‘டிக்டாக்’ நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதே சமயம் அவர் உய்குர் முஸ்லிம்களை பற்றி கூறியதற்காக அவரது கணக்கு நீக்கப்படவில்லை என்றும் ‘டிக்டாக்’கின் விதிகளை மீறும் வகையில் பின்லேடன் பற்றி வீடியோ வெளியிட்டதற்காக நீக்கம் செய்யப் பட்டது என்றும் ‘டிக்டாக்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 
Tags:    

Similar News