செய்திகள்
உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கிய விமானம்

உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கி ஊசலாடிய விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

Published On 2019-11-25 11:27 GMT   |   Update On 2019-11-25 11:27 GMT
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்ததில் உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூயார்க்:

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தை சேர்ந்தவர் தாமஸ் காஸ்கோவிச் (வயது 65). இவர் பைபெர் கப் எனும் தனது சிறிய வகை விமானத்தை நேற்று ஓட்டிச்சென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் ஸ்காட் கவுண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதையடுத்து தாறுமாறாக அங்குமிங்குமாக பறந்த விமானம் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

‘அவரச எண்ணான 911 க்கு அழைப்பு வந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மின்னழுத்த கம்பிகளில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விமானி எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டார்’, என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News