செய்திகள்
உணவுப்பொருட்கள்

உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் சம்பளம்

Published On 2019-11-22 08:51 GMT   |   Update On 2019-11-22 08:51 GMT
இங்கிலாந்தின் பிரபல உணவகம் டீ, கேக் முதலிய உணவுப்பொருட்களை சுவை பார்த்து சொல்வதற்காக தினமும் 129 அமெரிக்க டாலர் சம்பளத்திற்கு ஊழியர்களை நியமிக்க உள்ளது.
லண்டன்: 

இங்கிலாந்தின் கிராஸ்மியர் நகரில் டபோடில் உணவகம் மற்றும் அழகுநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தனது  வாடிக்கையாளர்களுக்கு சுவை மிகுந்த உணவு வழங்குவதை, உறுதி செய்வதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது.  அதாவது, உணவகத்தில் தயாரிக்கப்படும் டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை (ஸ்னாக்ஸ்) சுவை பார்த்து சொல்வதற்காக பிரத்யேக  ஊழியர்களை நியமிக்க உள்ளது. அவர்களுக்கு தினமும் 129 அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்க உள்ளது.  

இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘ஆடம்பரமான பிற்பகல் வேளை தேநீரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம்.  பிரிட்டனிலேயே இது தான் சிறந்த உணவகம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த உணவுப்பொருளின் சுவை சோதனையாளர்கள்  தேவைப்படுகிறார்கள்.  

இந்த வேலைக்காக உணவகத்தின் இணையதளத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் சுவை-சோதனையாளர்கள்  தேநீர் மற்றும் பீட்ரூட் மற்றும் மட்டன் சீஸ் ஸ்கோன்கள், மாலை நேரம் சாப்பிடும் பிஸ்கட்டுகள் மற்றும் மிளகுக்கீரை பை (ரொட்டி)  உள்ளிட்ட சிற்றுண்டிகளை சுவைத்து சோதனை செய்வார்கள்.  

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக 129 அமெரிக்க  டாலர்களும்(இந்திய ரூபாய் மதிப்பில் 9 ஆயிரம் ரூபாய்), கட்டணம் ஏதுமின்றி இரவு இங்கேயே தங்கிக்கொள்ள அனுமதியும்  அளிக்கப்படும்’, என தெரிவித்தனர்.
Tags:    

Similar News