செய்திகள்
கோப்பு படம்

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி

Published On 2019-11-20 13:33 GMT   |   Update On 2019-11-20 13:34 GMT
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. காங்கோவிற்கு அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் இருநாட்டிலும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவை காங்கோ அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு கிவு மாகாணத்திற்கு உள்பட்ட பேனி நகரில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
Tags:    

Similar News