செய்திகள்
மாலி ராணுவ வீரர்கள்

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-11-19 06:44 GMT   |   Update On 2019-11-19 06:44 GMT
மாலி நாட்டு எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
பமாகோ:

மாலி நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, மாலி மற்றும் நைஜர் ராணுவம் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மாலியின் வடகிழக்கு பகுதியின் காவ் பிராந்தியத்தில் உள்ள டபான்கோர்ட் பகுதியில் நேற்று ராணுவம் ரோந்து  சென்றது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘கூட்டு ரோந்துப் பணியின்போது எதிர்பாராதவிதமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 29 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.  

பயங்கரவாதிகள் தரப்பில் 17 பேர்  கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 70 மோட்டர் சைக்கிள் வாகனங்கள் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News