செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே

Published On 2019-11-17 12:27 GMT   |   Update On 2019-11-17 12:27 GMT
இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
கொழும்பு:

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் இருந்து புதிய அதிபர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News