செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி

Published On 2019-11-17 11:46 GMT   |   Update On 2019-11-17 11:46 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கொழும்பு:

இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
 
நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் முடிவடைந்தது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், அந்நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீதம் (69 லட்சத்து 24 ஆயிரத்து 255) வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.



ஆளும்கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 41.99 சதவீதம் (55 லட்சத்து 64 ஆயிரத்து 239) வாக்குகளை பெற்றார்.

இதர வேட்பாளர்கள் அனைவரும் மொத்தமாக 5.76 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர் என  இலங்கை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tags:    

Similar News