செய்திகள்
குல்பூஷண் ஜாதவ்

ஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி: பாகிஸ்தான் முடிவு

Published On 2019-11-14 02:43 GMT   |   Update On 2019-11-14 03:09 GMT
சர்வதேச கோர்ட்டு நிபந்தனையை ஏற்று பாகிஸ்தான், ஜாதவுக்கு பொதுமக்களுக்கான கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் உரிமையை வழங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இஸ்லாமாபாத் :

இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49) பாகிஸ்தானால் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டார். அந்நாட்டு ராணுவ கோர்ட்டு 2017-ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஜாதவ் ஈரானில் இருந்தபோது அவர் கடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்து வருகிறது.

இப்போது பாகிஸ்தான், சர்வதேச கோர்ட்டு நிபந்தனையை ஏற்று ஜாதவுக்கு பொதுமக்களுக்கான கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் உரிமையை வழங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதற்காக ராணுவ சட்டவிதிகளில் திருத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News