செய்திகள்
100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு

நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு வெளியே வந்தது

Published On 2019-11-05 19:35 GMT   |   Update On 2019-11-05 19:35 GMT
சூறாவளி காற்று வீசியதன் காரணமாக 100 ஆண்டுகளுக்கு முன் நயாகரா ஆற்றில் பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது.
ஒட்டாவா:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்த இழுவை படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 பேர் இருந்தனர்.

அவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் அந்த படகை அங்கேயே விட்டுவிட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரையேற்றினர். அதன் பிறகு அந்த படகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்துகொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Tags:    

Similar News