செய்திகள்
ஆண்டோனியோ குட்டரெஸ்

கடல் மட்டம் உயருவதால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

Published On 2019-11-05 02:04 GMT   |   Update On 2019-11-05 02:04 GMT
இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் கூறினார்.
பாங்காக் :

பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

2050-ம் ஆண்டுக்குள் உலகில் 30 கோடி மக்கள் கடல் நீரால் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் கணிக்கப்பட்டதைவிட வேகமாக உயர்ந்துவருகிறது. அரசுகளின் நடவடிக்கைகளைவிட பருவநிலை மாற்றம் வேகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

தென்கிழக்கு ஆசியா தான் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும். தாய்லாந்து மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கடல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் பூமிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் இது.

விஞ்ஞானிகள் சொல்வதை கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளதை அரசுகளுக்கும், உள்ளூர் நிர்வாகங்களுக்கும், மக்களுக்கும் ஐ.நா. கவலையுடன் கவனத்துக்கு கொண்டு வருகிறது. நிலத்தில் இருந்து எடுக்கப்படும் எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நிலக்கரியை பயன்படுத்தும் புதிய அனல் மின்நிலையங்கள் நிறுவுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News