செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 4 பேர் பரிதாப பலி

Published On 2019-11-01 13:38 GMT   |   Update On 2019-11-01 13:38 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும்.  அன்றைய தினம் விடுமுறை விடப்படும். 

இந்த நிகழ்ச்சியில், பூசணிக்காய்களை பயன்படுத்தி அதில், ஓவியம் வரைவது, பல்வேறு வடிவங்களை உருவாக்குவது போன்றவை மேற்கொள்ளப்படும். கப் கேக்குகள், கேண்டிகள், ஆப்பிள்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும். மேலும், பேய் விரட்டுவதற்காக அதனை போன்று முகமூடிகளை அணிந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், அமெரிக்காவில் கலிபோர்னியாவின் ஒரிண்டா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஹாலோவீன் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. அப்போது திடீரென அங்கு துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News