செய்திகள்
துருக்கியில் உள்ள ஒரு சுற்றுலா தளம்

துருக்கி வரும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

Published On 2019-10-23 17:20 GMT   |   Update On 2019-10-23 17:20 GMT
துருக்கி வரும் இந்தியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அங்காரா:

துருக்கி அரசு சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை பயங்கரவாதிகள் எனக்கூறி தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. 

தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான குர்திஷ்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறிவருகின்றனர். இதனால் துருக்கி-சிரியா எல்லைபகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.சபை பொதுக்கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன்,' காஷ்மீர் விவகாரம் மோதல் மூலம் அல்லாமல் சமத்துவம், நீதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமார் 72 ஆண்டுகளாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனை உலக நாடுகளிடையே போதிய கவனம் ஈர்க்கவில்லை’ என பாகிஸ்தானுக்கு ஆதரவாக் கருத்தை தெரிவித்தார்.

துருக்கி அதிபரின் இந்த கருத்துக்கு கடும் கண்டம் தெரிவித்த இந்தியா, காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விவகாரம் என உறுதியாக தெரிவித்தது.



இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு வரும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், துருக்கி நாட்டிற்கு பயணிகளாக வரும் இந்தியர்கள் மீது இதுவரை எந்த வித விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறாத நிலையிலும், மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


 துருக்கியில் உள்ள இந்தியர்கள் யாரேனுக்கும் உதவி தேவைப்பட்டால் அங்காராவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News