செய்திகள்
ஈராக் எண்ணெய் வயல்

ஈராக்கில் எண்ணெய் வயல் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 போலீஸ்காரர்கள் பலி

Published On 2019-10-22 08:19 GMT   |   Update On 2019-10-22 08:19 GMT
ஈராக்கில் எண்ணெய் வயலை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ளது சலாடின் மாகாணம். சலாடின் மாகாண தலைநகரான டிர்கிட்டில் இருந்து கிழக்கெ 40 கி.மீ தொலைவில் அல்லாஸ் எண்ணெய் வயல் உள்ளது. அங்கிருந்து ஒரு நாளைக்கு 20,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கியமான அந்த பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மழை மற்றும் சூறைக்காற்று ஆகிய மோசமான வானிலையை பயன்படுத்தி நேற்று மாலை போலீசார் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். பின்பு பயங்கரவாதிகள் பின் வாங்கினர். இந்த தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர், மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

2014 ஆம் ஆண்டில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லாஸ் மற்றும் அருகிலுள்ள அஜில் எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்தினர். தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக அதிக அளவு எண்ணெய்யை அங்கிருந்து எடுத்துக்கொண்டனர்.

இரண்டு எண்ணெய் வயல்களும் ஈராக் படைகளால் 2015 மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News