செய்திகள்
உலகின் நீண்ட தூர விமான சேவை

உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி

Published On 2019-10-20 20:03 GMT   |   Update On 2019-10-20 20:03 GMT
ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவான்டாஸ் விமான நிறுவனம் உலகிலேயே நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
சிட்னி:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட விமானம் தொடர்ச்சியாக 19 மணிநேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து 16 ஆயிரத்து 200 கிலோமீட்டரை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம் செய்தனர்.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், அடுத்த மாதம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சிட்னிக்கு இடைநில்லா விமான சேவையை சோதிக்க இருப்பதாக குவாண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சோதனையும் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் 2023-ம் ஆண்டுகள் நியூயார்க் நகரில் இருந்து சிட்னிக்கும், லண்டனில் இருந்து சிட்னிக்கும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உலக அளவில் நீண்ட தொலைவு பறக்கும் விமானமாக, சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 18 மணி நேரம் 5 நிமிடம் பயணிக்கும் இடைநில்லா விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News