செய்திகள்
நீர்த்தேக்கம் உடைந்ததால் சேதமடைந்த பகுதிகள்

ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி

Published On 2019-10-19 06:40 GMT   |   Update On 2019-10-19 06:40 GMT
ரஷ்யா நாட்டில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
மாஸ்கோ:

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும்  நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்தது. இதையடுத்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த 200 பணியாளர்கள், 5 எம்ஐ -8 ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்ஐ -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஒரு விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News