செய்திகள்
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து மோடி இரங்கல்

சவுதி அரேபியாவில் பஸ் விபத்து : வெளிநாட்டினர் 35 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2019-10-17 19:43 GMT   |   Update On 2019-10-17 19:43 GMT
சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் வெளிநாட்டினர் 35 பேர் பலியானார்கள். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹஜ் யாத்திரையாக உலகம் முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பேர் வந்தனர்.

அதே சமயத்தில், மெக்காவை சுற்றி உள்ள முஸ்லிம் புனித தலங்களுக்கு வருடம் முழுவதும் புனித பயணம் நடந்து வருகிறது. அதுபோல், சவுதி அரேபியாவில் குடியேறிய அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், மெக்காவை சுற்றி உள்ள முஸ்லிம் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் பஸ்சை வாடகைக்கு பிடித் தனர்.

அந்த பஸ்சில், மெதினா சென்று விட்டு, அங்கிருந்து மெக்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். மெதினா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கனரக வாகனத்துடன் அவர்களது பஸ் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில், 35 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அல்-ஹம்னா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானோர் குடும்பங்களுக்கு மெதினா பிராந்திய கவர்னர் இளவரசர் பைசல் பின் சல்மான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, பலியானோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘சவுதி அரேபியாவில் மெக்கா அருகே பஸ் விபத்து ஏற்பட்டது பற்றி அறிந்து வேதனை அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பலியானவர்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News