செய்திகள்
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர்

இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Published On 2019-10-14 10:14 GMT   |   Update On 2019-10-14 10:14 GMT
வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்:

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான பொருளியல் நிபுணர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ கணவர் - மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News