செய்திகள்
தாக்குதலுக்குள்ளான சபிட்டி எண்ணெய் கப்பல்

சவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

Published On 2019-10-11 12:51 GMT   |   Update On 2019-10-11 12:51 GMT
ஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய டேங்கர் கப்பல் மீது செங்கடல் பகுதியில் இன்று ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஜெத்தா:

ஈரான் அரசுக்கு சொந்தமான 'சபிட்டி’ என்ற பெட்ரோலிய டேங்கர் கப்பல் பெட்ரோலிய கச்சா எண்ணையுடன் இன்று செங்கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

ஜெத்தா துறைமுகத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர்  தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 5 மற்றும் 5.20 மணியளவில் கப்பலின் மீது இரு ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின.



இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. கடலில் கலந்த கச்சா எண்ணெய் தொடர்பான செய்திகள் வெளியானதும் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை இன்று 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News