செய்திகள்
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான விரண்டோ

இந்தோனேசிய தலைமை பாதுகாப்பு மந்திரி மீது கத்திக்குத்து தாக்குதல்

Published On 2019-10-10 12:43 GMT   |   Update On 2019-10-10 12:43 GMT
இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரியை குறிவைத்து மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரி விரண்டோ (72). இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 

இந்நிலையில், அந்நாட்டின் பன்டென் மாகாணத்தில் உள்ள பெண்டிக்லங் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்பாக விரண்டோ இன்று அப்பகுதிக்கு வந்தார். தலைமை பாதுகாப்பு மந்திரியை வரவேற்க மக்கள் காத்திருந்தனர். 



தனது காரை விட்டு இறங்கிய விரண்டோவை வரவேற்க அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் இரண்டு பேர் (ஆண் மற்றும் பெண்) திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தினர். மேலும், தாக்குதலை தடுக்க சென்ற மாவட்ட காவல் ஆணையர் உள்பட பாதுகாப்பு அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கினர்.இந்த கத்திகுத்து தாக்குதலில் நிலைகுலைந்த விரண்டோ ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 



இதையடுத்து படுகாயமடைந்த விரண்டோவை மீட்ட பாதுகாப்பு படையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மேலும், இந்த கோர தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News