செய்திகள்
ரபேல் விமானம் முன் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்

Published On 2019-10-08 13:06 GMT   |   Update On 2019-10-08 13:57 GMT
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார்.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்ச்சி நடைபெறும் மெரிக்னாக் நகருக்கு அவர் சென்றார். வெலிஸி - வில்லாகூப்லே  விமானப் படைத்தளத்திற்குச் சென்ற அவரை, அந்நாட்டு விமானப் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். 

இதையடுத்து அந்நாட்டு ராணுவ விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி அவர் விமானத்தில் பயணம் செய்தார். மெரிக்னாக் நகரில் பிரான்சிடம் இருந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் முதல் ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், குறித்த நேரத்தில் ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ரபேல் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு வாயு என அர்த்தம். அதன்படி, இந்த ரபேல் போர் விமானங்கள் பெயருக்கு ஏற்றபடி பறந்து இந்தியாவை பாதுகாக்குமென நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News