செய்திகள்
ஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங்

ஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

Published On 2019-10-06 10:14 GMT   |   Update On 2019-10-06 10:14 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
புதுடெல்லி:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருநாட்டு தலைவர்கள் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 7 புதிய ஒப்பந்தங்கள் நேற்று கையொப்பமாகின.

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் திட்டம் உள்ளிட்ட 3 முக்கிய திட்டங்களை ஷேக் ஹசினாவும் பிரதமர் மோடியும் தொடங்கி வைத்தனர். பின்னர், நேற்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசினா சந்தித்துப் பேசினார்.



இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இன்று ஷேக் ஹசினாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, ‘தனிப்பட்ட இழப்பு மற்றும் துயரத்தில் இருந்து மீண்டும் வரக்கூடிய ஷேக் ஹசினாவின் பலமும் நெஞ்சுரமும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தீரமாகவும் கடுமையாகவும் போராடும் அவரது விடாமுயற்சியும் எனக்கான மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்து வந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News