செய்திகள்
போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்வு - 4 ஆயிரம் பேர் படுகாயம்

Published On 2019-10-05 13:05 GMT   |   Update On 2019-10-05 13:05 GMT
ஈராக் நாட்டில் அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் 93 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
 
இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர்.
ஆனால், அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.



நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி இருதரப்பு மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் நாட்டின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார்.
 
Tags:    

Similar News