செய்திகள்
ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்தும் நபர்கள்

ஹாங்காங்: முகமூடி அணிந்து போராட தடை

Published On 2019-10-04 12:16 GMT   |   Update On 2019-10-04 12:16 GMT
ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட தடை விதித்து தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், ஹாங்காங்கிற்கு சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரார்களை தாக்கிய போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.



போராட்டக்காரர்கள் அனைவரும் போலீசார் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையிலும், கண்ணீர் புகை குண்டுகளின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள முகத்தினை முகமூடியால் மறைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்துவதை தடை விதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை தலைமை நிர்வாகி கேரி லாம் இன்று அமல்படுத்தியுள்ளார். ஹாங்காங்கில் முகமூடி அணிந்து கொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது. வார இறுதி நாளான (சனிக்கிழமை) நாளை இந்த புதிய சட்டத்தால் போராட்டம் தீவிரம் அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News