செய்திகள்
துஷார் அட்ரி

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் சடலமாக மீட்பு

Published On 2019-10-03 15:30 GMT   |   Update On 2019-10-03 15:30 GMT
அமெரிக்காவில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி கோடிஸ்வரர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா குரூஸ் பகுதியை சேர்ந்தவர் துஷார் அட்ரி (50). இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடிஸ்வரரான இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்திவந்தார். 

இதற்கிடையில், கடந்த செவ்வாய்கிழமை ( அக்டோபர் 1) அதிகாலை துஷார் அட்ரி நண்பர்களுடன் அவரது வீட்டில் இருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துஷார் அட்ரியை சொகுசு காரில் கடத்தி சென்றனர். 



இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் கடத்தப்பட்ட துஷார் அட்ரியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், திவீர தேடுதலுக்கு பிறகு சாண்ட குரூஸ் நகரில் உள்ள மலைப்பகுதியில் கடத்தப்பட்ட துஷார் அட்ரி சொகுசு காரை போலீசார் இன்று கண்டுபிடித்தனர். மேலும், அந்த காரில் துஷார் அட்ரி சடலமாக கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News