செய்திகள்
மாலி தாக்குதல்

மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 வீரர்கள் பலி

Published On 2019-10-02 23:11 GMT   |   Update On 2019-10-02 23:11 GMT
மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்தியி தாக்குதலில் 25 ராணுவவீரர்கள் பலியாகினர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலியில் ராணுவவீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் இவர்கள் தற்போது அண்டை நாடான புர்கினா பாசோவிலும் காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இவர்களை மாலி மற்றும் புர்கினா பாசோ நாடுகளின் ராணுவ படைகள் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் மாலியில் புர்கினா பாசோவின் எல்லையையொட்டி அமைந்துள்ள பவுல்கெசி மற்றும் மொன்டோரோ நகரங்களில் உள்ள 2 ராணுவ சாவடிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 25 ராணுவவீரர்கள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 
Tags:    

Similar News