செய்திகள்
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்- ஜெய்சங்கர்

Published On 2019-10-02 04:22 GMT   |   Update On 2019-10-02 04:22 GMT
ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வாஷிங்டன்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு மந்திரி ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் இந்தியா வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும்போது, பாகிஸ்தானின் 70 ஆண்டுகால திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.



காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்சியை தடுக்கும் நோக்கத்தில் செல்போன் நெட்வொர்க் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு மாறும்போது எந்த உயிரிழப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News