செய்திகள்
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் தம்பி ஹோசைன் ஃபெரேடோன்

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

Published On 2019-10-01 14:48 GMT   |   Update On 2019-10-01 14:48 GMT
ஊழல் வழக்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் தம்பியை 5 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெஹ்ரான்:

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் தம்பி ஹோசைன் ஃபெரேடோன் (62). அதிபருக்கு மிகவும் நம்பிக்கைகுரியவராக கருதப்பட்ட இவர் ஈரான் அரசின் கீழ் இயங்கி வந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளங்களை உயர்த்தி கணக்கு காண்பித்து ஊழல் செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு குற்றச்சாட்டபட்டார்.

இந்த ஊழல் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஹோசைன் ஃபெரேடோன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல மில்லியன் டாலர்கள் நீதிமன்றத்தில் பிணை தொகையாக செலுத்திய பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  

இவ்வழக்கில் ஹோசைன் ஃபெரேடோன் ஊழல் செய்திருந்தது ஆதாரங்களுடன் நிரூபணம் ஆனதால் அவரை குற்றவாளி என்று கடந்த மே மாதம் நீதிமன்றம் தீர்மானித்தது.

இதையடுத்து, ஹோசைன் ஃபெரேடோனுக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பல மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Tags:    

Similar News