செய்திகள்
கிருஷ்ணா பஹதூர் மஹாரா

கற்பழிப்பு குற்றச்சாட்டு - நேபாளம் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா

Published On 2019-10-01 13:42 GMT   |   Update On 2019-10-01 13:42 GMT
நேபாளம் பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் பெண்ணை கற்பழித்ததாக எழுந்த குற்றச்சாட்டால் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா. இவர் மீது நேற்று முன்தினம் ஒரு பெண் கற்பழிப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண், போதையில் தனது வீட்டுக்கு வந்த  சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தன்னை பலவந்தமாக கற்பழித்து காயப்படுத்தி விட்டதாகவும் இது தொடர்பாக பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டால் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

எனது நன்னடத்தைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பாகுபாடற்ற விசாரணை நடைபெறுவதற்கு வகை செய்யும் வகையில் பாராளுமன்ற சபாநாயகர் பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகராக இல்லாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து பதவி வகிப்பார் என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News