செய்திகள்
சவுதி அரேபியா

வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா முடிவு

Published On 2019-09-27 16:27 GMT   |   Update On 2019-09-27 16:27 GMT
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா நோக்கத்துடன் வருபவர்களுக்கு முதல் முறையாக விசா வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ரியாத்:

சவுதி அரேபியா சமீபகாலமாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தனது கச்சா எண்ணெய் கிடங்குகள் தாக்கப்பட்டதையடுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மற்ற துறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க திட்டமிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சவுதி அரேபியா வர விசா வழங்குவதன் மூலம் நாம் வரலாற்றை உருவாக்கியுள்ளோம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை மந்திரி அகமது அல் ஹடேப் தெரிவித்துள்ளார். 



இந்த சுற்றுலா விசாவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 49 நாடுகளை சேர்தவர்கள் இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்குவதால் சுற்றுலாத் துறையில் வரும் ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டு சுமார் 5 லட்சம் ஹோட்டல் அறைகளை உருவாக்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவசியம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News