செய்திகள்
பருவநிலை மாற்றத்தை தடுக்க நியூசிலாந்தில் தீவிர போராட்டம்

பருவநிலை மாற்றத்தை தடுக்க நியூசிலாந்தில் தீவிர போராட்டம்

Published On 2019-09-27 06:18 GMT   |   Update On 2019-09-27 06:18 GMT
பருவநிலை மாற்றம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி நியூசிலாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெலிங்டன்:

பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் (பருவநிலை மாற்ற ஆர்வலர்) என்ற 16 வயது சிறுமி , பருவநிலை மாற்றத்தால் நாம் பேரழிவை சந்திப்போம் என, உலக தலைவர்களை கடுமையாக சாடினார். 

அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதன் உத்வேகம் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டாம் கட்ட போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 

அவ்வகையில், நியூசிலாந்து நாட்டில் இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து போராட்டம் நடத்தினர். இதுவரை அந்நாட்டில் இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதில்லை. பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் கனடா நாட்டின் மாண்ட்ரியல் நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News