செய்திகள்
கத்தார் மன்னருடன் மோடி சந்திப்பு

உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை- நியூயார்க்கில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு

Published On 2019-09-24 05:40 GMT   |   Update On 2019-09-24 05:40 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்துக்கு இடையே  பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.  

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்கல், இத்தாலி பிரதமர் கியுசேப் கோண்ட், கத்தார் மன்னர் பின் ஹமத், கொலம்பியா அதிபர் இவான் டியூக் மார்கஸ், நைஜர் அதிபர் இசோபு முகமது, நமிபியா அதிபர் ஹேக் ஜீன்காப், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகிய தலைவர்களை சந்தித்து பேசினார்.



இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.

மேலும், யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றிட்டாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளை மோடி சுட்டிக்காட்டினார். 
Tags:    

Similar News