செய்திகள்
மோடியுடன் டிரம்ப்

என்னை மும்பைக்கு அழைப்பீர்களா, பிரதமரே..? - மோடியை நெகிழவைத்த டிரம்ப்

Published On 2019-09-23 09:12 GMT   |   Update On 2019-09-23 09:12 GMT
மும்பையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டியை காண்பதற்கு என்னை அழைப்பீர்களா, பிரதமரே..? என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை நெகிழவைத்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் அளித்த ‘ஹவுடி-மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் முதலில் மோடி சிறிது நேரம் பேசி முடித்ததும், பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

இந்தியாவின் மும்பை நகரில் அடுத்த மாதம் 70 பள்ளிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பங்கேற்கும் தேசிய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

இதை சுட்டிக்காட்டி பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இந்தியாவில் முதன்முறையாக அடுத்த வாரம் மும்பை நகரில் தேசிய கைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. நான் அழைக்கப்படுவேனா.., மிஸ்டர் பிரதமரே? என்று மோடியை பார்த்து வேடிக்கையாக கேட்டார்.



அப்போது பார்வையாளர்கள் அமரும் முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, மிகவும் நெகிழ்ச்சி அடைந்தவராக சிரித்தவாறு டிரம்ப்பின் பேச்சை கைதட்டி ரசித்தார். அரங்கில் கூடி இருந்த அனைவரும் இதைக்கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர்.

அந்த ஆரவார ஓசை அடங்குவதற்காக சற்று இடைவெளி விட்ட டிரம்ப், ‘நான் வரகக்கூடும், கவனமாக இருங்கள், நான் வரக்கூடும்’ என மீண்டும் கூறினார்.

அவருக்கு பிறகு மேடையேறி பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்தார்.

'2017-ம் ஆண்டில் என்னை உங்கள் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று என்னுடைய குடும்பத்தாரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் கவுரவம் எனக்கு கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘என்னுடைய குடும்பத்தார்’ என்று கூறியவாறு அங்கு கூடியிருந்த இந்தியர்களை சுட்டிக்காட்டியபோதும் அரங்கில் இருந்தவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர்.
Tags:    

Similar News