செய்திகள்
எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி

ஹூஸ்டனில் எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2019-09-22 02:24 GMT   |   Update On 2019-09-22 02:24 GMT
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்குள்ள எரிசக்தி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.

இந்த பயணத்தின் முதல் கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 



இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரும், வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோக்லேயும் பங்கேற்றனர்.
இதில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மோடி இன்று பங்கேற்கிறார்.     
Tags:    

Similar News