செய்திகள்
சையது அக்பருதீன்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது - இந்தியா அறிவிப்பு

Published On 2019-09-20 20:48 GMT   |   Update On 2019-09-20 20:48 GMT
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், வருகிற 27-ந் தேதி, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பேசுகிறார்கள். அக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பப்போவதாக இம்ரான்கான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

இதுவரை பயங்கரவாதத்தை தேசியமயமாக்கிய பாகிஸ்தான், இப்போது வெறுப்பு பேச்சையும் தேசியமயமாக்க பார்க்கிறது. பாகிஸ்தான் எவ்வளவு தூரம் இறங்கிச் சென்று பேசினாலும், இந்தியா உயர்வாகவே நடந்து கொள்ளும்.

பாகிஸ்தானுடன் இந்தியா எவ்வித பேச்சும் வைத்துக்கொள்ளாது. ஆனால், அமைதியாக எதிர்கொண்டு, முறையாக பதில் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News