செய்திகள்
தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்கு மற்றும் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கவன்

அமெரிக்க ஏவுகணை தடுப்பு கவனின் தோல்வியை காட்டுகிறதா? சவுதி எண்ணெய் கிடங்கு தாக்குதல்

Published On 2019-09-19 15:48 GMT   |   Update On 2019-09-19 15:48 GMT
சவுதி எண்ணெய் கிடங்குகளில் நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கவன்களின் தோல்வியை காட்டுகிறதா? என கேள்வி எழுந்துள்ளது.
ரியாத்:

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மற்றும் தடுத்தர தூர தொலைவு சென்று இலக்குகளை அழிக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் சவுதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

இந்நிலையில், வளைகுடா நாடுகளில் வெளிநாடுகளிடமிருந்து அதிக பாதுகாப்பு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் சவுதி அரேபியா முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் அமெரிக்காவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது. அதிநவீன எப்-15 போர் விமானங்கள், அப்பாசி ரக போர் விமானங்கள் என பல விதமான போர் கருவிகளை சவுதி, அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. 

குறிப்பாக எதிரி நாடுகளின் ஏவுகணைகள் தாக்குதலில் இருந்து எல்லைகளை பாதுகாக்கும் விதமாக அமெரிக்காவின் 'போட்ரெட்’ எனப்படும் அதி நவீன எவுகணை தடுப்பு கவன்களை தனது எல்லைகளின் பகுதிகளில் சவுதி நிறுவியுள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எதிரி நாடுகளிடமிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை 160 கிலோ. மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.



ஆனால், ஏமன் எல்லையில் இருந்து சுமார் 1200 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள சவுதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வேண்டிய அமெரிக்காவின் 'போட்ரெட்’ ஏவுகணை தடுப்பு கவன்கள் செயல்படாமல் முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வி அமெரிக்காவின் 'போட்ரெட்’ ஏவுகணை தடுப்பு கவன்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை உலக நாடுகள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், சவுதி அரேபியா விரும்பினால் அவர்களுக்கு அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News