செய்திகள்
நிரவ் மோடி

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்

Published On 2019-09-19 09:58 GMT   |   Update On 2019-09-19 09:58 GMT
லண்டனில் சிறையில் உள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லண்டன்:

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதன்பின், நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது.
 
இந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக  வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. 
Tags:    

Similar News