செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

வடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி

Published On 2019-09-17 19:17 GMT   |   Update On 2019-09-17 19:17 GMT
குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேசுவதற்கு வடகொரியா வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து வெள்ளைமாளிகையில் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:-

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நட்புறவு நீடிக்கிறது. ஆனால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்போது உள்ள சூழலை பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன். கிம் ஜாங் அன்னும் அமெரிக்கா வர விரும்புவார் என்று நம்புகிறேன். ஆனால் அது இப்போது இல்லை. நாங்கள் இதனை நோக்கி செல்ல இன்னும் சில காலம் வேண்டி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News