செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு

Published On 2019-09-16 08:28 GMT   |   Update On 2019-09-16 08:28 GMT
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு ஹவுஸ்டன் நகரில் இந்தியர்கள் அளிக்கும் ‘ஹவுடி, மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
வாஷிங்டன்:

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பங்கேற்பதை கொண்டாடும் வகையில் அவருக்கு டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் ‘ஹவுடி, மோடி’ என்ற பெயரில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஹவுஸ்டன் நகரில் உள்ள மிகப்பெரிய என்.ஆர்.ஜி.ஸ்டேடியத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.



’பகிர்ந்த கனவுகள் - ஒளிமயமான எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் பிரதமர் மோடி அமெரிக்காவாழ் இந்தியர்களிடையில் சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில்,  ‘ஹவுடி, மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் என அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News