செய்திகள்
ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஈரான் மீண்டும் திட்டவட்டம்

Published On 2019-09-03 11:27 GMT   |   Update On 2019-09-03 11:27 GMT
ஈரான் அமெரிக்கா நாடுகளுக்கிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 தெக்ரான்:

ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் 
செய்தது.ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. 

இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டியது.



இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, ஈரான் - அமெரிக்கா இடையே இருதரப்பு 
பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பில்லை. மேலும் தற்போது ஐரோப்பிய நாடுகளுடன் நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தை 
பலனளிக்காமல் போனால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் தனது உறுதிப்பாட்டை சில நாட்களுக்குள் குறைத்துக் கொள்ளும் எனவும் 
தெரிவித்தார்.



Tags:    

Similar News