செய்திகள்
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்திவ் மெக்கானேகே

படித்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர் ஆனார் பிரபல ஹாலிவுட் நடிகர்

Published On 2019-08-31 18:39 GMT   |   Update On 2019-08-31 18:39 GMT
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்திவ் மெக்கானேகே படித்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர் ஆனார்
வா‌ஷிங்டன்:

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்திவ் மெக்கானேகே (வயது 49). 1993-ம் ஆண்டு ‘டேஸ்டு அண்ட் கன்பியூஸ்டு’ (பிரமிப்பும், குழப்பமும்) என்ற நகைச்சுவை படத்தின் மூலம் இவர் பிரபலம் ஆனார். தொடர்ந்து ஏ டைம் டூ கில், காண்டாக்ட், யு-571 உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் அங்குள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இப்போது இவர் அந்த பல்கலைக்கழகத்தின் மூடி தகவல் தொடர்பு கல்லூரியில் ரேடியோ-டெலிவி‌‌ஷன்- சினிமா துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, ‘‘ நான் திரைப்பட கல்லூரியில் படித்த போது விரும்பிய வகுப்பு இது. இந்த மாணவர்களுடன் வகுப்பறையில் பணியாற்றுவது, அவர்களை தயார்படுத்தும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது. காகிதத்தில் உள்ள வார்த்தைகளை திரைப்படமாக மாற்றுவது என்பது ஒரு கலை, விஞ்ஞானம். அதை மாணவர்களுக்கு கற்றுத்தரப்போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கூறினார்.
Tags:    

Similar News