செய்திகள்
தலிபான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: 40 பேர் உயிரிழப்பு

Published On 2019-08-31 12:16 GMT   |   Update On 2019-08-31 12:25 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் இன்று ராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்டுஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டுஸ் நகரில் இன்று பயங்கரவாதிகளுக்கு ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.



குன்டுஸ் நகரை கைப்பற்றும் பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களை சிறைபிடித்து அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News