செய்திகள்
போராட்டக்குழு தலைவர் ஜோஷ்வா வாங்

ஹாங்காங்: போராட்டக்குழு தலைவர் ஜோஷ்வா வாங் ஜாமீனில் விடுதலை

Published On 2019-08-30 15:36 GMT   |   Update On 2019-08-30 15:36 GMT
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு தலைமை தாங்கியதாக இன்று காலை கைது செய்யப்பட்ட ஜோஷ்வா வாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து சீன ராணுவத்தின் படைப்பிரிவுகளை சேர்ந்த சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்கள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்துள்ளனர்.



இதற்கிடையில் ஹாங்காங் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை ஹாங்காங் போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களது கைது சம்பவம் போராட்டக்காரர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜோஷ்வா வாங் உள்பட மூவரும் ஹாங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் நாளை ( சனிக்கிழமை) மாபெரும் போராட்டம் நடத்த போராட்டக்குழு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News