செய்திகள்
ஈரான் எண்ணெய் கப்பல்

ஈரான் எண்ணெய்க் கப்பல் லெபனான் நோக்கி பயணம் - துருக்கி

Published On 2019-08-30 12:30 GMT   |   Update On 2019-08-30 12:30 GMT
பிரிட்டனால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் அட்ரியன் தர்யா லெபனான் நோக்கி பயணிப்பதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓஸ்லோ:

ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் எண்ணெய்க் கப்பலை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து அட்ரியன் தர்யா எனப்படும் இந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் துருக்கியில் உள்ள முக்கிய எண்ணெய் 
முனையமான மெர்சின் துறைமுகம் நோக்கி செல்வதாக அதன் தானியங்கி அடையாள அமைப்பு தரவு தளத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. 140 மில்லியன் டாலர் மதிப்புள்ள 2.1 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் இந்த கப்பலில் இருந்தன.  

இந்நிலையில் அட்ரியன் தர்யா லெபனான் நோக்கி பயணிப்பதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்ஸோக்லு இன்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில் “நாங்கள் இன்னும் ஈரானிடமிருந்து எரிவாயுவை வாங்குகிறோம், ஆனால் நாங்கள் எண்ணெய் வாங்குவதில்லை. மேலும் அட்ரியன் தர்யா கப்பலை நாங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்”, என்றார். லெபனான் நோக்கி செல்லும் அட்ரியன் தர்யா அங்கிருந்து வேறு எங்கு செல்லும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.


Tags:    

Similar News