செய்திகள்
இம்ரான் கான்

மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் -பாக்.பிரதமர் அலுவலகத்துக்கு சிக்கல்

Published On 2019-08-30 03:07 GMT   |   Update On 2019-08-30 03:07 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தின் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இருக்கும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படாததால், இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.



இது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு பல முறை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து  2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது.

எனவே, கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News