செய்திகள்
ஜி7 மாநாட்டில் வைரலான புகைப்படம்

ஜி7 மாநாட்டில் கனடா பிரதமரை டிரம்பின் மனைவி வரவேற்ற புகைப்படம் வைரல்

Published On 2019-08-28 03:20 GMT   |   Update On 2019-08-28 03:20 GMT
ஜி7 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப் மனைவி மெலனியா வரவேற்ற புகைப்படம் வைரலாகியுள்ளதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
பாரிஸ்:

பிரான்ஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார்.

இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான் இப்போது வைரலாக மூல காரணம் ஆகும். ட்ரூடோவைப் பார்க்கும் மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் இது.



இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியாவின் முகபாவனை மற்றும் டிரம்பின் ரியாக்‌ஷன்தான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து கமெண்ட் அடித்து, வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் #MelaniaLovesTrudeau எனும் ஹேஷ்டாக்கினை டிரெண்ட் ஆக்கினர்.
Tags:    

Similar News