செய்திகள்
டிரம்ப் - மோடி

பிரான்சில் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை

Published On 2019-08-26 08:33 GMT   |   Update On 2019-08-26 08:33 GMT
பிரான்சில் ஜி-7 மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என்று தெரிகிறது.
பாரிஸ்:

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். பக்ரைன் பயணத்தை முடித்துவிட்டு அவர் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரிஸ் சென்றார்.

ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இருவருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என்று தெரிகிறது.

காஷ்மீரின் தற்போதைய நிலைமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் சென்று டிரம்ப் 2 முறை கூறி இருந்தார். இதை இந்தியா நிராகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

டிரம்புடனான பேச்சு வார்த்தையின்போது மோடி தனது பதிலை ஆக்ரோசமாக வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News