செய்திகள்
போரிஸ் ஜான்சன் டொனால்டு டிரம்ப்

பிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்

Published On 2019-08-25 12:52 GMT   |   Update On 2019-08-25 12:52 GMT
பிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நபர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யூரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியே முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.

தற்போது பிரான்ஸில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட முன்னணி தலைவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். பின்னர் டொனால்டு டிரம்பிடம் பிரெக்சிட்டுக்கான உங்கள் ஆலோசனை என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப் ‘‘போரிஸ் ஜான்சனுக்கு ஆலோசனை தேவையில்லை. அந்த வேலைக்கான சரியான நபர் அவர்’’ என்றார்.

இதனால் பிரக்ஸிட் விவகாரத்தில் அமெரிக்கா எந்தவிமான முயற்சியும் மேற்கொள்ளாது என்று தெரிகிறது.
Tags:    

Similar News