செய்திகள்
போராட்டத்தின் ஒரு பகுதி

ஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு

Published On 2019-08-24 17:31 GMT   |   Update On 2019-08-24 17:31 GMT
பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி-7 மாநாட்டின்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸ்:

உலகின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ஜி 7 என அழைக்கப்படுகிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். 

அந்த ஜி-7 அமைப்பின் 45-வது மாநாடு இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பையாரிட்ஸ் நகரில் இன்று தொடங்கி வரும் திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.   


இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டின் நோக்கமாக உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஜி-7 மாநாடு நடைபெறும்  பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News