செய்திகள்
போலீசார் மற்றும் போராட்டக்காரர் மோதலில் ஈடுபடும் காட்சி

ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு, கண்ணீர் புகைகுண்டு வீச்சு

Published On 2019-08-24 15:06 GMT   |   Update On 2019-08-24 15:06 GMT
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக  அறிவித்தார். ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், ஹாங்காங் போராட்டத்தின் 12-வது வாரமான இன்று அந்நகரின் குவாங் டோங் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் முகங்களை முகமூடிகளால் மறைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெப்பர் ஸ்பிரேவை போராட்டக்காரர்களின் முகத்தில் அடித்தும் விரட்டினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் கிடைத்த கற்கள் மற்றும் கட்டைகளை போலீசார் மீது வீசினர்.

இந்த போராட்டத்தால் ஹாங்காங் நகரமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க சீன ராணுவம் தற்போதுவரை ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News